மகனின் பிறந்தநாளுக்கு தாயார் அளித்த வித்தியாசமான பரிசு

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

அவுஸ்திரேலியாவவில் உள்ள தாயார் ஒருவர் தனது மகனுக்கு ஆணுறை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய "டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்"-டை பிறந்தநாள் பரிசாக வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் New South Wales பகுதியை சேர்ந்த செபி என்ற பெண்மணியின் மகன் ஜேம்ஸ். இவர் இப்போது தனது 13-ஆவது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார்.

advertisement

இவ்வளவு நாள் குழந்தை என்ற நிலைமை மாறி தற்போது டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் தனது செல்ல மகன் ஜேம்ஸ்-க்கு, டீன் ஏஜ் எமர்ஜென்சி கிட்டை பரிசாக வழங்கியுள்ளார் Zephy Mahlis. மகனுக்கு வழங்கிய அந்த 'கிட்'டில் ஆணுறை, ரேஷர், ஷவர் ஜெல், தலைமுடிக்கு தேய்க்கும் ஜெல், பணம் உள்ளிட்ட பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து அவர் கூறும்போது, இனி வரும் காலங்களில் என் மகனுக்கு இது போன்ற பொருட்கள் அத்தியாவசியமாக தேவைப்படும். அதனால் தான் கொடுத்தேன் என கூறியுள்ளார்.

அத்யாவசியமான விஷயங்களை குழந்தைகளுக்கு கற்பிப்பது நமது கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

இவரின் இந்த செயலுக்கு அந்த நாட்டில் உள்ள சில தாய்மார்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். வேறு சில தாய்மார்கள் கூறும்போது, இந்த இளம்வயதிலேயே எதற்கு ஆணுறை..? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments