கங்காருகளின் எண்ணிக்கை: அவுஸ்திரேலிய அரசு எடுத்த அதிரடி முடிவு

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasrimarket.com

கங்காருகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் அதை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு அவுஸ்திரேலிய அரசு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடையாளங்களின் ஒன்றான கங்காரு அந்நாட்டின் தேசிய விலங்காகவும் உள்ளது.

தற்போது இந்த கங்காருகள் அந்த நாட்டின் மக்கள் தொகையை விடவும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 50 மில்லியன் கங்காருகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இது 2010 ஆம் ஆண்டு வெறும் 10 மில்லியன் மட்டுமே இருந்தது.

இந்த நிலையில் அதைக் கட்டுப்படுத்த அவுஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் மிருகவதை சட்டம் கடுமையாக இருந்தாலும், தற்போது வேறு வழி இன்றி அதன் இறைச்சிகளை அதிகமாக விற்பனைக்கு அனுமதிக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மட்டுமின்றி பொதுமக்கள் கங்காரு இறைச்சிகளை அதிகம் சாப்பிட வேண்டும் எனவும் அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும் அரசு இணையதளத்தில் கங்காரு இறைச்சி உடலுக்கு நல்லது எனவும் விளம்பரப்படுத்தியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்