முகத்தை காட்டாவிட்டால் அபராதம்: இஸ்லாமிய பெண்களுக்கு அரசு எச்சரிக்கை

Report Print Peterson Peterson in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasri.com
advertisement

அவுஸ்ரேலியா நாட்டில் பொது இடங்களில் முகத்தை காட்டாத இஸ்லாமிய பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு கடந்த மே மாத அரசு அனுமதி அளித்தது.

advertisement

இப்புதிய சட்டம் அடுத்த மாதம் 1-ம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. இப்புதிய சட்டத்தின் அடிப்படையில் பொது இடங்களில் இஸ்லாமிய பெண்கள் புர்கா அணிந்து செல்லக்கூடாது.

பொலிசார் உத்தரவின் அடிப்படையில் இஸ்லாமிய பெண்கள் அவர்களின் முகங்களை வெளியே காட்ட வேண்டும்.

முகத்தை காட்ட மறுத்தால் அதே இடத்தில் அவர்களுக்கு 150 யூரோ அபராதத்தை பொலிசார் விதிக்கலாம்.

அபராதத்தையும் செலுத்த மறுத்தால் அவரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமுலுக்கு வரவுள்ள இப்புதிய சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு அரசாங்கம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்