அவுஸ்திரேலிய Victorian Greens கட்சியின் தலைவராக இலங்கை பெண் நியமனம்

Report Print Vethu Vethu in அவுஸ்திரேலியா
147Shares
147Shares
lankasrimarket.com

இலங்கை பிறந்த அவுஸ்திரேலிய சட்டசபை உறுப்பினர் சமந்தா ரத்னம் Victorian Greens கிளையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமந்தா ரத்னம் நியமிக்கப்பட்டமையானது ஆச்சரியமான தேர்வு என முன்னாள் மோர்லண்ட் மேயர் இன்று அறிவித்துள்ளார்.

சமகால மேல்நிலை உறுப்பினர் Nina Springle துணை தலைமை பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

சட்டமன்ற குழுவில் ஓய்வு பெற்ற முன்னாள் தலைவர் Greg Barberக்கு பதிலாக இலங்கை பெண் சமந்தா ரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் அவர் உத்தியோகபூர்வமாக பொறுப்பினை ஏற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“எங்கள் கட்சிக்கு இதுவொரு உற்சாகமான நேரம். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல் படி எடுக்க நாங்கள் கடினமாக உழைக்கிறோம்” என சமந்தா ரத்னம் தெரிவித்துள்ளார்.

விக்டோரியர்கள் நாட்டில் மிகவும் முற்போக்கானவர்களாக உள்ளனர், பெரிய பிரச்சினைகளில் வழிநடத்தும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் விரும்புகிறோம்.

அரசியல் பங்களிப்பு, அரசியல் நன்கொடை ஆகியவை அனைத்து நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பில் நான் கவனம் செலுத்துவேன்.

நான் உற்சாகமாக இருக்கிறேன், மரியாதையுடனும், தாழ்மையுடனும் இந்த பதியை ஏற்றுகொள்கின்றேன். விக்டோரியா பாராளுமன்றத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்த நாம் மிகவும் ஆவலாக உள்ளோம், என சமந்தா ரத்னம் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த சமந்தா, 1987 ஆம் ஆண்டில் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இலங்கையை விட்டு குழந்தையாக சென்ற சமந்தா இன்று அவுஸ்திரேலியாவில் பிரபல்யம் அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்