குவியல் குவியலாக கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள்: அவுஸ்திரேலியா அருகே கொலை தீவு

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
lankasri.com

அவுஸ்திரேலியா அருகே அமைந்துள்ள பீக்கான் தீவில் இருந்து ஆய்வாளர்கள் குவியல் குவியலாக எலும்புக்கூடுகளை கண்டெடுத்துள்ள சம்பவம் திகிலூட்டும் வகையில் அமைந்துள்ளது.

கொலை தீவு என பரவலாக அறியப்படும் பீக்கான் தீவில் இருந்தே ஆய்வாளர்கள் தற்போது குவியல் குவியலாக எலும்புக்கூடுகளை கண்டெடுத்துள்ளனர்.

கடந்த 1629 ஆம் ஆண்டு Batavia என்ற கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் இருந்த மாலுமிகள் உள்ளிட்ட 40 பேர் பீக்கான் தீவில் கரை ஏறினர்.

ஆனால் அங்குள்ள பழங்குடியின மக்களால் அத்துணை பேரும் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

3 மாத கால இடைவெளியில் குறித்த தீவில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 125 பேர் கொடூரமாக சித்திரவதைக்கு பின்னர் படுகொலை செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சில பெண்கள் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதைக்கு பின்னரே படுகொலை செய்யப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1960 ஆம் ஆண்டு முதன் முறையாக இப்பகுதிக்கு ஆய்வுக்காக பயணம் மேற்கொண்ட ஆய்வாளர்களுக்கு குவியல் குவியலாக எலும்புக்கூடுகள் சிக்கியது.

அதன் பின்னர் மேற்கொண்ட பல ஆய்வுகளின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் எப்படி இறந்திருப்பார்கள் என்ற திகிலூட்டும் உண்மைகளை வெளி உலகிற்கு பதிவு செய்தனர்.

2015 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட 3 எலும்புக்கூடுகளில் சிறுவர் உள்ளிட்ட ஒரு குடும்பமாக இருக்கலாம் என முடிவுக்கு வந்தனர்.

இருப்பினும் இதுவரை குறித்த படுகொலைகளை நிகழ்த்தியது யார் என்ற உண்மையை ஆய்வாளர்களால் ஒரு முடிவுக்கு எட்ட முடியவில்லை எனவும், ஆராய்ச்சி மேலும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த ஆய்வில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்