குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற இளம் தாய்: தண்டனை தராமல் விடுவித்த நீதிமன்றம்

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
Cineulagam.com

குழந்தை உடலில் ஆவி இருப்பதாக நினைத்து ஆற்றில் வீசி கொலை செய்த தாயின் மனநிலையை கருதி நீதிமன்றம் சிறை தண்டனையிலிருந்து விடுவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் சோபினா நிகட் (24). இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் தனது 15 மாத பெண் குழந்தை சனயாவின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக நினைத்து வீட்டின் அருகில் இருக்கும் ஆற்றில் தூக்கி வீசி கொன்றுள்ளார்.

இது குறித்து பொலிசார் சோபினாவிடம் விசாரித்த போது தனது குழந்தையை ஆப்பிரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் கடத்தி சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.

பின்னர் விசாரணையில் அவர் தான் மகளை கொன்றார் என தெரியவந்தது. பயத்தின் காரணமாக பொய் சொல்லிவிட்டதாக சோபினார் பொலிசாரிடம் கூறினார்.

இதையடுத்து சோபினாவை பொலிசார் கைது செய்த நிலையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.

அவரின் கணவர் முன்னரே பிரிந்து சென்றதும் உறுதியானது. சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

சமுதாய திருத்தம் சட்ட அடிப்படையில் 12 மாத தண்டனை அவருக்கு கொடுக்கப்பட்ட போதும் ஏற்கனவே 529 நாட்கள் பொலிஸ் காவலில் சோபியா இருந்ததால் அதை கணக்கில் கொண்டு தற்காலிகமாக தற்போது விடுவிக்கபட்டுள்ளார்.

சோபியா மனநிலை சரியில்லாதவர் என்பதால் அவர் சிகிச்சை பெறவே இத்தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்