அவுஸ்திரேலியாவில் கருணைக் கொலைக்கு அனுமதி

Report Print Fathima Fathima in அவுஸ்திரேலியா
107Shares
107Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக் கொலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தீர்க்க முடியாத நோயால் அவதியுறும் நோயாளிகள் தங்களை கருணைக் கொலை செய்யக் கோரினால் அனுமதி வழங்கப்படும்.

Voluntary Euthanasia என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவுக்கு இரு அவைகளிலும் பெரும்பாலானவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

மசோதா நிறைவேற்றப்பட்டாலும், அதை சட்டமாக்கி 18 மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது, கருணைக் கொலைக்கு அனுமதி வழங்கிய முதல் மாகாணம் விக்டோரியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்