அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தவர் பரிதாப மரணம்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in அவுஸ்திரேலியா
400Shares
400Shares
lankasrimarket.com

சாலை விபத்தில் இந்தியர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பர்மிந்தர் சிங் (33). இவர் கடந்த 2008-ல் அவுஸ்திரேலியாவுக்கு சென்று ஓட்டுனர் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 2013-ல் பர்மிந்தருக்கு அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை அட்டை கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 1-ஆம் திகதி டிரக் லொறியை ஓட்டி சென்ற போது விபத்து ஏற்பட்டு பர்மிந்தர் மரணமடைந்துள்ளார்.

இது குறித்து இந்தியாவில் உள்ள அவரின் தந்தை ஹர்தேவ் சிங் (62) கூறுகையில், அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருந்து மல்வேர்னுக்கு என் மகன் லொறியில் சென்று கொண்டிருந்தான்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்த நிலையில் பள்ளத்தாக்கில் லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கிய பர்மிந்தர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இது குறித்து பர்மிந்தர் நண்பர்கள் என தகவல் கொடுத்தனர்.

தற்போது அவன் உடல் சிட்னியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.

இந்த விடயத்தில் தேவையில்லாமல் தாமதப்படுத்துகிறார்கள், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்