மிரள வைத்த ஐந்து மீற்றர் மலைப் பாம்பு

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
282Shares
282Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் 5 மீற்றர் நீள மலைப்பாம்பை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து பகுதியின் வடக்கு பிரதேசத்தில், ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது, இந்த பாம்பை கண்டுள்ளதாக குறித்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பாம்பானது ஐந்து மீற்றருக்கும் அதிகமான நீளம் இருக்கும் என்றும் அளந்து பார்க்கும் வகையிலான உயிரி அல்ல அது என்றும் அந்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் எடுக்கப்பட்ட குறித்த புகைப்படத்தை திங்களன்று குவின்ஸ்லாந்து காவல்துறை பகிர, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.

இதுவரை இந்த புகைப்படத்தை இரண்டு மில்லியன் மக்கள் பார்த்ததோடு, பத்தாயிரம் பேர் இது குறித்து கருத்தும் கூறியுள்ளனர்.

ஸ்கிரப் பைத்தான் என்ற இந்த வகை பாம்புகள், ஏழு மீற்றர், அதாவது 23அடி வரையில் வளரக்கூடியது என்கிறது அவுஸ்திரேலிய உயிரியல் பூங்கா.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்