அவுஸ்திரேலியாவில் மருமகளை கொடூரமாக கொலை செய்த மாமனார்!

Report Print Deepthi Deepthi in அவுஸ்திரேலியா
0Shares
0Shares
Cineulagam.com

அவுஸ்திரேலியாவில் தனது மருமகளை கொலை செய்த நபருக்கு 46 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mengmei Leng (25) என்ற மாணவி சிட்னியில் உள்ள தனது மாமா Derek Barrett மற்றும் அத்தையுடன் தங்கி கல்லூரியில் பயின்று வந்துள்ளார்.

Leng-ஐ குளிக்கும்போது அவரது மாமா பலமுறை புகைப்படம் எடுத்துள்ளார், மேலும் தவறாக நடந்துகொள்ளவும் முயன்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 2016 ஆம் வருடம் Leng- ஐ கொடூரமாக குத்தி கொலை செய்து, அவரது உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் கட்டி Snapper Point எனும் இடத்தில் வீசியிருந்தார்.

பொலிசாரால் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி மாமா Derek Barrett - ஐ கைது செய்தனர்.

அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவருக்கு 46 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

34 வருடங்களுக்கு பரோலில் வெளியே வர முடியாதவாறு மொத்தமாக 46 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனது மகளை அவர்கள் பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள், அவள் தங்கிபடிப்பதற்கு அவளது மாமா வீடு வசதியாக இருக்கும் என்றுதான் அங்கு அனுப்பிவைத்தேன், ஆனால் இவ்வாறு நடந்துவிட்டது என Leng- இன் தாய் கூறியுள்ளார்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்