வடகொரியாவால் அவுஸ்திரேலியருக்கு ஏற்பட்ட சிக்கல்: கடும் நடவடிக்கைக்கு வாய்ப்பு

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
167Shares
167Shares
lankasrimarket.com

வடகொரியாவுக்காக ஆயுத பேரத்தில் ஈடுபட்டதாக கூறி அவுஸ்திரேலிய நபர் ஒருவரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ளனர்.

வடகொரியாவுக்காக அதிக சேதாரத்தை வரவழைக்கக் கூடிய ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கான பேரத்தில் ஈடுபட்டதாக கூறி 59 வயதான சிட்னியை சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பொருளாதார வல்லுநர் அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய நாடுகள் தொடர்பான சட்டங்களை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மன்றமானது கடந்த 12 மாதங்களாக வடகொரியா மீது மூன்று முக்கிய பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இருப்பினும் வடகொரியா தனது அணு ஆயுத சோதனை திட்டத்தை இதுவரை கைவிடவில்லை என்பது மட்டுமல்ல, டிசம்பர் இறுதிக்குள் அடுத்த ஏவுகணை சோதனையை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகொரியாவின் முன்னாள் தலைவரும் தற்போதைய தலைவரின் தந்தையுமான கிம் இல், கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார்.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வடகொரியா எல்லா ஆண்டும் ஏவுகணை சோதனை மற்றும் ராணுவ அணிவகுப்பு என சிறப்பித்து வருகிறது.

இந்த முறையும் அதுபோன்ற ஒரு ஏவுகணை சோதனை அந்த நாட்டு முன்னெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்