30 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர்: தந்தையின் உள்ளுணர்வால் நிகழ்ந்த அதிசயம்

Report Print Arbin Arbin in அவுஸ்திரேலியா
385Shares
385Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சாலை விபத்தில் சிக்கி 30 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர் தந்தையின் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் குடியிருக்கும் சாமுவேல் லெத்ப்ரிட்ஜ் என்ற 17 வயது இளைஞர் தமது நண்பர் ஒருவரை சந்திக்கும் பொருட்டு கடந்த ஞாயிறு அன்று தமது காரில் கிளம்பியுள்ளார்.

ஆனால் அவர் அங்கு சென்று சேரவில்லை என்ற தகவல் அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி சாமுவேலின் மொபைலில் தொடர்பு கொண்டபோதும் எந்த பதிலும் இல்லை என தெரியவந்த நிலையில்,

இளைஞரின் குடும்பத்தினர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மட்டுமின்றி சாமுவேலின் சகோதரி மேகன், தமது சகோதரர் மாயமானது தொடர்பில் உதவி கேட்டு உருக்கமான பதிவு ஒன்றையும் சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

அடுத்த நாள் காலையில் இளைஞரின் தந்தை டோனிக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டவாறே இருந்துள்ளது. தமது மகன் ஏதோ சிக்கலில் சிக்கியுள்ளதும், உதவிக்கு ஆளின்றி தவிப்பதாகவும் அவருக்கு தோன்றியுள்ளது.

இதனையடுத்து உடனடியாக முடிவெடுத்த அவர், தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து ஹெலிகொப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தேடுதலில் களமிறங்கியுள்ளார்.

அதுவும் குறிப்பிட்ட இடத்தில் சென்று தேடினால் தமது மகனை மீட்க முடியும் எனவும் நம்பிய அவர், உடனடியாக குறித்த பகுதிக்கு ஹெலிகொப்டரை செலுத்த பணித்துள்ளார்.

குறித்த பகுதியானது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் குடும்பத்தினருக்கு சாலை விபத்தில் சிக்கிய இடமாகும்.

சாமுவேல் ஒருபோதும் வீட்டை விட்டு தலைமறைவாகும் குனம் கொண்டவர் அல்ல, மட்டுமின்றி அவரது நண்பர்கள் சம்பவத்திற்கும் சில மணி நேரம் முன்னரே அவருடன் பேசியுள்ளனர்.

ஹெலிகொப்டர் புறப்பட்ட 10 நிமிடத்தில் டோனி குறிப்பிட்ட அதே பகுதியில் கார் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளதை டோனியும் மீட்பு குழுவினரும் கண்டுபிடித்துள்ளனர்.

Crangan Bay பகுதியில் உள்ள குறித்த சாலையில் கார் விபத்துக்குள்ளாகி நொறுங்கிய நிலையில் கிடந்துள்ளது.

இதனையடுத்து விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர் காருக்குள் சிக்கியுள்ள சாமுவேலை சிரமப்பட்டு மீட்டுள்ளனர்.

தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ள குடும்பத்தினர் தற்போது அவர் அபாயகட்டத்தை தாண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நீண்ட 30 மணி நேரம் உயிருக்கு போராடிய சாமுவேலின் மனக்கருத்தை அவரது நண்பர்களும் மருத்துவக்குழுவினரும் பாராட்டியுள்ளனர்.

மேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்