தொடையின் இடையில் கருமை அதிகமாக உள்ளதா? இதோ சூப்பரான வழி!

Report Print Printha in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

நமது உடம்பின் மற்ற இடங்களை விட அக்குள், தொடையின் உள்பக்கம், முழங்கால் போன்ற உறுப்புகளின் இடைப் பகுதிகளில் மட்டும் அதக அளவில் கருமை நிறம் காணப்படும்.

இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கு சூப்பரான தீர்வு இதோ!

தொடை இடையில் கருமை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

வெயில் அதிகமாக இருக்கும் போது, வெளியே செல்வதால், நமது சருமத்தை விட மறைக்கப்பட்ட பகுதிகள் அதிகமாக கருமைத் தன்மையை அடைகிறது.

எனெனில் வெயிலில் உண்டாகும் வேர்வை காரணமாக உண்டாகும் அழுக்குகள் காற்று புகாத மறைவிடங்களில் அப்படியே தங்கி, நமது சருமத்தில் படிந்து கருமை நிறத்தை ஏற்படுத்துகிறது.

கருமை நிறத்தை போக்குவதற்கான தீர்வு

மஞ்சள் மற்றும் பாலை சிறிதளவு ஆரஞ்சு தோல் பவுடருடன் சேர்த்து பேஸ்ட் போல ஆக்கிக் கொள்ள வேண்டும்.

பின் இதை கருமையாக உள்ள உள் தொடைப் பகுதிகளில் தடவி, அரை மணி நேரம் வரை நன்கு உலர விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

அதேபோல தேனும் இதற்கு மிகச் சிறந்த தீர்வாக அமைவதால்,

ஒரு எலுமிச்சையின் சாறினை எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து கருப்பான இடத்தில் தடவி நன்கு உலரவிட்டு பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவி வர வேண்டும்.

இதேபோல் வாரத்துக்கு இரண்டு முறைகள் தொடர்ந்து செய்து வந்தால், விரைவில் நல்ல மாற்றம் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments