தீக்காயம் பட்ட தழும்பை மறைக்க வேண்டுமா?

Report Print Printha in அழகு
0Shares
0Shares
lankasri.com

நமது உடம்பில் ஏதேனும் தீக்காயம் பட்டுவிட்டால், அந்த இடத்தின் சருமம் அசிங்கமான தோற்றத்தை அளித்து, அது நமது அழகை கெடுக்கும் வகையில் இருக்கும்.

தீக்காயத்தினால் ஏற்படும் தழும்புகளை மறையச் செய்து, நமது சரும அழகினை மேம்படுத்துவதற்கு, இயற்கையில் உள்ளது அருமையான டிப்ஸ்!

தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் என்ன செய்ய வேண்டும்?
  • தீக்காயம் பட்டவுடன் உடனடியாக தேனை தடவ வேண்டும். இதனால் சருமத்தில் எரிச்சல் ஏற்படாமல் விரைவில் காயம் ஆறும். மேலும் ஐஸ் கட்டி மற்றும் உப்பு நீரை பயன்படுத்தினால் கூட உடனடி பலன் கிடைக்கும்.
  • தீக்காயம் ஆறிய பின் ஏற்பட்ட தழும்பினை நீக்குவதற்கு, எலுமிச்சை சாறு மிகவும் சிறந்தது என்பதால் எலுமிச்சை சாற்றை தினமும், தழும்பு ஏற்பட்ட இடத்தில் தடவி, 2 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
  • தினமும் குளிப்பதகும் முன் தீக்காய தழும்புகள் உள்ள இடத்தில் பாலை தடவி, மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
  • தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்புகளை நீக்க, பாதாம் அல்லது ஆலிவ் எண்ணெயை ஒரு நாளைக்கு, இரண்டு முறை தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.
  • கற்றாழையில் உள்ள ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பு விரைவில் மறைந்து, சருமம் மென்மையாகும்.
  • தக்காளி நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, தழும்புகளை மறைய வைக்கும். எனவே தக்காளி சாற்றை தழும்பு உள்ள இடத்தில் தடவி, தினமும் மசாஜ் செய்து வர வேண்டும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments