முட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம் உள்ளது

Report Print Printha in அழகு
0Shares
0Shares
lankasri.com
advertisement

அன்றாடம் நாம் தேவையில்லை என்று தூக்கிப்போடும் முட்டை ஓட்டில் பல்வேறு நன்மைகள் மறைந்துள்ளது.

முட்டை ஓட்டை பயன்படுத்துவது எப்படி?

முட்டையின் ஓட்டை சுத்தமாக கழுவி, பொடி செய்து, அதை ஒரு ஷீட்டில் போட்டு 10-15 நிமிடங்கள் வரை 150 டிகிரி ஹீட்டில் பேக் செய்ய வேண்டும். ஏனெனில் அதனால் முட்டை ஓட்டில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்.

advertisement

பின் அந்த முட்டையின் ஓட்டை எடுத்து, அதனுடன் மற்றொரு முட்டையை உடைத்து அதிலுள்ள வெள்ளைக்கருவை மட்டும் தனியாக பிரித்து அதை முட்டை ஓட்டின் பொடியுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பேஸ்ட் பதத்தில் வந்ததும் அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இதனால் முகத்திற்கு ஈரப்பதம் கிடைப்பதுடன், சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

முகத்தின் சுருக்கம் மறைய

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதற்கு, முட்டையின் ஓட்டை பொடியாக்கிக் அதனுடன் தயிர் 2 டேபிள் ஸ்பூன் கலந்து முகத்தில் தடவி காய வைத்து கழுவ வேண்டும்.

சரும அரிப்பு நீங்க

சருமத்தில் உள்ள அலர்ஜி, அரிப்புகள் குணமாக, ஆப்பிள் சிடர் வினிகரில் முட்டையின் ஓட்டை கலந்து 5 மணி நேரம் ஊற வைத்து, பின் மெல்லிய துணி அல்லது காட்டன் பஞ்சு பயன்படுத்தி, அந்த கலவையை தொட்டு அலர்ஜி வந்த இடத்தில் தடவ வேண்டும்.

கண்களின் கருவளையம் மறைய

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய, முட்டை ஓட்டின் பொடியில் 2 டீஸ்பூன் எடுத்து அதை தேனுடன் கலந்து தினமும் கண்களைச் சுற்றி தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

மிருதுவான சருமத்தை பெற

முட்டை ஓட்டின் பொடியுடன் கற்றாழை ஜெல் மற்றும் தேன் 1 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி, வந்தால் சருமம் மிருதுவாகும். இதை வாரம் 2 முறைகள் பின்பற்ற வேண்டும்.

பற்களின் மஞ்சள் கறை நீங்க

தினமும் பற்களை துலக்கிய பின் கால்சியம் சத்து நிறைந்த முட்டை ஓட்டின் பொடியை, பற்களில் தேய்த்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்