தேங்காய் எண்ணெய்: இப்படியும் பயன்படுத்தலாம் தெரியுமா?

Report Print Printha in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

தலைமுடியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யை நமது சரும அழகிற்காகவும் பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்
  • தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி மேக்கப்பை மென்மையாகவும், துல்லியமாகவும் அகற்றி விடலாம்.
  • நம் உடல் முழுவதும் தேங்காய் எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்து வந்தால், சருமம் தளர்வாகி, வறட்சித்தன்மை நீங்கி, புத்துணர்ச்சி பெறும்.
  • தேங்காய் எண்ணெய்யை கண் பகுதியை சுற்றிலும் தேய்த்து வந்தால், கருவளையம் மற்றும் சுருக்கங்கள் மறையும்.
  • தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை சம அளவு கலந்து அதை முகத்தில் நன்கு தடவி வந்தால், முகப்பருக்கள் நீங்கி, சருமம் பளபளப்பாகும்.
  • தேங்காய் எண்ணெய்யுடன் பனங்கற்கண்டை கலந்து முகத்தில் தடவி, வந்தால், அது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, ஈரப்பதத்தை அதிகமாக்கும்.
  • சூடான நீரில் தேங்காய் எண்ணெய்யை கலந்து சருமத்தில் தடவி வந்தால், அது சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அதிகரிக்கச் செய்யும்.
  • தேங்காய் எண்ணெய் அழுக்கு மற்றும் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மையை கொண்டது. எனவே சிறிய வெட்டுக் காயங்கள், சிராய்ப்புகள் மற்றும் புண்கள் ஆகியவற்றின் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்