சொக்லேட் ஃபேஷியலில் இவ்வளவு அற்புதமா?

Report Print Kavitha in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

ஒவ்வொரு பெண்ணும் தனது அழகை பாதுகாக்க சருமத்தையும் கவனமுடன் பராமரிக்க வேண்டும்.

சொக்லேட் பேஷியல் செய்வது சருமத்திற்கு நல்லது, அதிலுள்ள கோகோ என்ற பொருள் சருமத்தை பாதுகாக்கின்றது.

சொக்லேட்டுடன் தயிர்

சொக்லேட்டை நன்றாக உருக வைத்து அதோடு 1 ஸ்பூன் தயிர் மற்றும் தேன் சிறிதளவு வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்.

இவற்றை நன்கு கலந்து முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் ஊற விடவும், கண்களை சுற்றி சிறிது இடைவெளி விட்டு பூச வேண்டும்.

பின்னர் இளம் சூடான நீரில் முகத்தை கழுவவும், இவ்வாறு வாரம் 2 முறை செய்வதனால் சருமத்தை மென்மையாக மாற்றுகின்றது.

சொக்லேட்டுடன் ஆரஞ்சு

ஆரஞ்சு பழச்சாறு 4 தேக்கரண்டி பயன்படுத்தி சொக்லேட் பவுடர் ஆகியவற்றை சம அளவில் கலந்து கலந்து கொள்ளவும்.

முகத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பின்னர், குளிர்ந்த நீரில் கழுவவும், இவ்வாறு செய்துவர நாளடைவில் பிரகாசத்தை உணரலாம்.

சொக்லேட்டுடன் தேன்

சொக்லேட் நன்றாக மிதமான சூட்டில் உருக வைத்து, அதனுடன் தேன் மற்றும் வெண்ணெய் சிறிதளவு சக்கரையை சேர்த்து நன்றாக மென்மையான பேஸ்ட் போல் தயாரித்து கொள்ளவும்.

இதை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் காயவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரில் துடைத்து எடுத்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும், இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு நல்லது.

கொக்கொ பொடியுடன் ஓட் மீல்

1 தேக்கரண்டி கொக்கோ பொடியுடன் 1/4 கப் தேன், பின்னர் 1/8 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 3 டீஸ்பூன் ஓட்மீல் இவற்றை நன்றாக கலந்து முகத்துக்கு பூசி வர வேண்டும், இவ்வாறு செய்வதனால் முகத்திலுள்ள இறந்த செல்களை அகற்றி முகத்திற்கு புத்துணர்வைத் தரும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்