சீனா, ஜப்பான் பெண்களின் அழகு ரகசியம்! அட இவ்ளோ சிம்பிளா

Report Print Fathima Fathima in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

சீனா, ஜப்பான் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் பெண்களின் அழகுக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அரிசி நீர் தான்.

அரிசி ஊற வைத்த நீரில் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளது, இவை முக அழகிற்கும், சரும பராமரிப்புக்கும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

சருமப் பொலிவிற்கு

ஒரு கப் அரிசியுடன், இரண்டு கப் குளிர்ந்த நீர் ஊற்றி சுமார் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் மூன்று நிமிடங்களுக்கு அரிசி ஊற வைத்த நீரை விரல்களால் அலசி வடிகட்டிக் கொள்ளுங்கள்.

இந்த நீரை கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் நீங்கி விடும், இதனால் முகப்பருக்களும் வராது.

இழந்த நிறத்தையும் திரும்ப பெறலாம், முகமும் பொலிவாவதுடன் சருமம் பளிச்சிடும்.

இதேபோன்று ஊறவைத்த அரிசியில் ஒரு பாதியை பேஸ்ட் செய்து கொண்டு முகத்தில் தடவி கழுவவும், இதனால் இறந்த செல்கள் அழிவதுடன், கருப்பு புள்ளிகளும் மறையும்.

உடல் எடையை குறைக்க

ஏற்கனவே ஊறவைத்த அரிசியில் மற்றொரு பாதியை கொதிக்கும் நீரில் போட்டு அரிசி நன்கு வேகும் வரை காத்திருந்து பின்னர் அந்த கஞ்சியை வடிகட்டிக் கொள்ளுங்கள்.

சிறிது உப்பு சேர்ந்த இந்த கஞ்சியை உணவு உண்பதற்கு முன் அருந்தினால் நன்கு பசி எடுக்கும், தேவையான ஆற்றலை வழங்கும், தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதால் உடல் எடை குறையும்.

தலைமுடி பராமரிப்புக்கு

சாதம் வடித்த கஞ்சியை தலைக்கு குளிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக வேர்க்கால்களில் படும்படி மசாஜ் செய்ய வேண்டும், இதனால் நீளமான கூந்தலை பெறலாம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்