தலைமுடி அதிகமாக வளர இந்த வைத்தியத்தை பின்பற்றுங்கள்

Report Print Printha in அழகு
0Shares
0Shares
lankasri.com

முடி உதிர்வுக்கு உள்ள காரணங்களில் உணவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பொடுகுத் தொல்லை ஆகியவை மிகவும் முக்கியமான காரணமாகும்.

தேவையான பொருள்கள்
  • கரிசலாங்கண்ணிச்சாறு - 250 மி.லி
  • பொன்னாங்கண்ணிச்சாறு - 250 மி.லி
  • கீழாநெல்லிச்சாறு - 250 மி.லி
  • கீரை விதை - 10 கிராம்
  • கோரைக்கிழங்கு - 10 கிராம்
  • சந்தனக்கட்டை - 10 கிராம்
  • கார்போக அரிசி - 10 கிராம்
  • வெட்டிவேர் - 10 கிராம்
  • அகில் - 10 கிராம்
  • தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
  • இளநீர் - 200 மி.லி
செய்முறை

கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றின் முழுச் செடியை எடுத்து நன்கு இடித்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்.

கீரை விதைகளை எடுத்து அதில் 200 மி.லி இளநீர் ஊற்றி மூடி வைத்து விட்டு கோரைக்கிழங்கு, சந்தனக்கட்டை, கார்போக அரிசி, வெட்டிவேர் மற்றும் அகில் போன்றவற்றை நன்றாக இடித்து மாவு போல இடித்து எடுத்து கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு மண்பானையில் தேங்காய் எண்ணெய் ஊற்றி இளஞ்சூட்டில் அதில் இலைச்சாறுகளை ஊற்றி மூடி வைத்து சிறு தீயாக எரித்து பிறகு மற்ற இடித்து வைத்த மூலிகைகளையும் போட வேண்டும்.

அனைத்தையும் நன்றாக கலந்து அது நன்கு சுண்டியதும் வடிகட்டி ஆறவைத்து பயன்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முறை

தினமும் இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வரலாம். அல்லது 7 நாட்களுக்கு ஒரு முறை இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கூந்தல் மிகவும் கருமையாக நீண்டு வளரும்.

குறிப்பு

சளி பிடித்திருக்கும் போதும், உடல் நலம் சரியில்லாத போதும் இந்த தைலத்தை பயன்படுத்தக் கூடாது.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்