கருப்பாக இருக்கீங்களா? அப்படின்னா இதை படிங்க

Report Print Deepthi Deepthi in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

பொதுவாக எல்லா பெண்கள் தங்கள் அழகாக முக்கியத்துவம் செலுத்துவதுண்டு. குறிப்பாக இதில் கருப்பாக இருப்பவர் தங்களும் அழகாக வேண்டும் என்று நினைத்து கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கீரிம்களை பூசி மற்றும் அழகு நிலையங்களுக்கு சென்று நேரத்தை செலவழித்து அழகாக்குவதுண்டு.

கருப்பாக இருப்பதற்கு முதல் காரணம் உடலில் இருக்கும் நிறமி செல்களான மெலனின் அளவு அதிகமாக இருப்பது தான்.

சிலர் திடீரென்று கருப்பாக மாறுவார்கள், அதற்கு காரணமும் அவர்களது உடலில் உள்ள நிறமிச் செல்கள் அதிக அளவு மெலனினை சுரப்பதனாலும் தான்.

அதுமட்டுமல்லாமல் இத்தகைய செல்களின் சுரப்புத் தன்மையை குறைவுப்படுத்த வீட்டில் இருந்தே சில இயற்கையான பொருட்களை வைத்து செய்தால் மெலனின் அளவையும் எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று பார்ப்போம்.

  • பாதாம், பால் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு ஏற்ற சிறந்த பொருள். 3-4 பாதாம் பேஸ்ட், 1/2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு பின் அந்த பேஸ்டை முகத்திற்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து பிறகு கழுவவும். அதனை தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருப்பானது மறையும்.
  • 2-3 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து முகத்தில் குளிர்ந்த நீரில் அலசி வந்தால், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போவதோடு, முகமும் பளிச்சென்று இருக்கும்.
  • சந்தன பவுடர் ஒரு நல்ல சிறந்த சரும பராமரிப்பிற்கு ஏற்ற பொருள். அதனை தண்ணீரில் குலைத்து, கருமை அதிகமாக இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். அதனால் முகம் பொழிவு பெறும்.
  • வறண்ட சருமம் உள்ளவர்கள், சந்தன பவுடரும் பால் மற்றும் சிறிது தேனை சேர்த்து கலந்து தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து செய்யுங்கள். அதனை நாள்தோறும் செய்து வந்தால், நாளடைவில் நிறமி செல்களான மெலனின் அளவு குறைந்துவிடும்.
  • கோக்கோ வெண்ணெய் ஒரு நல்ல மாஸ்சுரைசர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த பொருள் எந்த இடம் அதிகமான அளவு கருப்பாக உள்ளதோ, அந்த இடத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்