பாலை முகத்திற்கு இப்படி யூஸ் பண்ணி பாருங்க!

Report Print Kavitha in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

பால் புதிய சரும செல்களைப் புதுப்பிக்கவும், கொலாஜென் உற்பத்திக்கும், சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், சரும வறட்சியைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

பாலில் உள்ள வைட்டமின்களான ஏ, டி, பி6 மற்றும் பி12, கால்சியம், புரோட்டீன் போன்றவை சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது.

சரும அழகை அதிகரிக்க பாலை எப்படியெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பச்சைப்பால்

பச்சை பாலை பஞ்சுருண்டையில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, முகம் பொலிவோடு காணப்படும்.

பால் மற்றும் வாழைப்பழம்

பச்சை பாலை நன்கு கனிந்த வாழைப்பழத்துடன் சேர்த்து, கை, கால் முகத்தில் தடவுவதன் மூலம், சருமத்தில் ஏற்படும் வறட்சி நீங்கி, சருமம் ஈரப்பசையுடனும், பொலிவோடும் இருக்கும்.

பால் மற்றும் ஓட்ஸ்

ஓட்ஸ் பொடி, தேன், வால்நட் பவுடர் ஆகியவற்றை பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரால் பின் கழுவுங்கள். இவ்வாறு செய்வதானால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை போக்கி புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

பால் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்

தேன், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் மசித்த வெள்ளரிக்காய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

இவ்வாறு செய்வதனால் சருமத்துளைகளின் ஆழத்தில் தேங்கியுள்ள அழுக்கைப் போக்குகின்றது.

பால் மற்றும் க்ரீன் டீ

பாலுடன் சிறிது க்ரீன் டீ சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதோடு, முதுமைக் கோடுகளும் நீங்கும்.

பால் மற்றும் தேன், பேக்கிங் சோடா

பாலுடன், தேன், பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீர் நிரப்பிய குளியல் டப்பில் சேர்த்து, அதனுள் 15 நிமிடம் அமர வேண்டும். இதனால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கும் மற்றும் மன அழுத்தமும் நீங்கும்.

பால் மற்றும் உருளைக்கிழங்கு

பாலை உருளைக்கிழங்கு சாற்றுடன் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் சருமத்தில் உள்ள கருமையான படலத்தையும், கரும்புள்ளிகளையும் போக்க உதவும்.

பால் மற்றும் முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவுடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை மறைக்கலாம்.

பால் மற்றும் பப்பாளி கூழ்

பப்பாளி கூழுடன், பாதாம் பேஸ்ட், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இச்செயலால் மாசடைந்த சுற்றுச்சூழலால் அழுக்கான சருமத்தை அழகாக மாற்ற முடியும்.

பால் மற்றும் ஆளி விதை எண்ணெய்

மசித்த வாழைப்பழத்துடன், பால், ஆளி விதை எண்ணெய் மற்றும் அன்னாசி கூழ் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இந்த மாஸ்க் முகத்தில் உள்ள முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமை தோற்றத்தைக் கொடுக்கும்.

பால் மற்றும் அவகேடோ

அவகேடோ பழத்தின் கனிந்த பகுதியை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கில் உள்ள ஆன்டி-ஏஜிங் பண்புகள், முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும். முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

பால் மற்றும் ஆரஞ்சு தோலின் பொடி

ஆரஞ்சு தோலின் பொடியை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு காய வைத்து, பின் நீர் பயன்படுத்தி மென்மையாக தேய்த்துக் கழுவுங்கள். இந்த மாஸ்க் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சருமத்திற்கு நல்ல நிறத்தை வழங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்