தயிரை இப்படி யூஸ் பண்ணி பாருங்க: முகத்தில் இருக்கும் கருமை மாயமாகும்

Report Print Santhan in அழகு
0Shares
0Shares
lankasri.com

பெரும்பாலான பெண்கள் இயற்கை வழியில் சரும பிரச்சனைகளை சரிசெய்ய மற்றும் அழகை மேம்படுத்த முயற்சிப்பார்கள்.

அப்படி நமது சரும ஆரோக்கியத்தையும் அழகையும் பராமரிக்க உதவும் எளிதில் கிடைக்கக்கூடிய ஓர் பொருள் தான் தயிர்.

இந்த தயிர் அனைவரது வீட்டிலுமே பொதுவாக காணப்படும் பொருளாகும். இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகள் நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்படும்

தயிர் மற்றும் எலுமிச்சை

  • ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடல் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் முகத்தை நீரால் கழுவிக் கொண்டு, அந்த ஈரமான முகத்தில் தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு முகத்தை நீரால் கழுவ வேண்டும். * இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், முகம் பொலிவாக காட்சியளிக்கும்.

தயிர் மற்றும் தக்காளி

  • தக்காளியை அரைத்து, அதில்1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
  • பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்