எண்ணெய் சருமத்தை பளபளப்பாக்க..இதை டிரை பண்ணுங்க

Report Print Santhan in அழகு
203Shares
203Shares
lankasrimarket.com

எண்ணெய்ச் சருமம், வறண்ட சருமம், நார்மல் சருமம், அலர்ஜியை ஏற்படுத்தக்கூடிய சருமம் என்று சருமத்தைப் பல வகைப்படுத்தலாம். இதில் உங்களது சருமம் எந்த வகையைச் சார்ந்தது என்பதை முதலில் தெரிந்துகொண்டு, அதற்கேற்பப் பராமரித்து வந்தால், சருமம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து மீள முடியும்.

முகத்தில் உள்ள அழுக்கை அப்புறப்படுத்த, வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம். சருமத்தின் துவாரங்கள் திறந்து தூசுக்கள், அழுக்குகள் நீங்கும். பிறகு, டர்க்கி டவலால் டோனிங் செய்யுங்கள்.

எண்ணெய் சருமம்

  • கொளுத்தும் வெயில் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து, உங்கள் முக அழகை கெடுத்துவிடும்.
  • வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.
  • முகத்தைத் தினமும் மூன்று முறை குளிர்ந்த நீரைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • வெள்ளரிக்காயைத் தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர, முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்கலாம்.
  • வெள்ளரிச்சாறுடன், பால் பவுடர் கலந்து தொடர்ந்து ஒரு மாதம் தடவினால், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாகக் காணப்படும்.
  • தக்காளிப் பழத்தை பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி, காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன் வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.
  • பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதி, கேரட் துருவலைக் கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும்.
  • சோளத்தை நன்கு பொடி செய்து, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்