நடிகர் பிரபுதேவாவின் பிட்னஸ் ரகசியம்: தினம் காலை உணவு இதுதானாம்

Report Print Printha in அழகு
0Shares
0Shares
Cineulagam.com

இந்தியத் திரைப்பட நடிகர், நடன அமைப்பாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் போன்ற பன்முக திறமை கொண்டவர் பிரபுதேவா.

இவருக்கு தற்போது 44 வயதாகிறது, அவரை பார்ப்பதற்கு இளம் வயதினரை போல இருப்பது எப்படி? என்று கேட்டால், அது அவருடைய உணவுப் பழக்கமாம்.

ஆம்., நடிகர் பிரபுதேவாவின் தினசரி எடுத்துக் கொள்ளும் உணவு பழக்கங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் பிரபுதேவா சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவாராம், அதுவும் காலையில் உடற்பயிற்சியை முடித்து விட்டு பழங்கள், முந்திரி மற்றும் பாதாம் போன்ற உலர்ந்த பழங்களுடன் 2 வாழைப்பழங்கள்.

இதை மட்டுமே அவர் தினமும் காலை உணவாக எடுத்துக் கொள்வாராம், எந்த உணவாக இருந்தாலும் அதை அளவாக சாப்பிடுவதுடன், இடையிடையே இளநீர், தர்பூசணி பழ ஜூஸ் போன்றவற்றை தவறாமல் சாப்பிடுவாராம்.

அதுவும் சீசனுக்கு ஏற்றபடி கிடைக்கும் பழங்களின் ஜூஸ்களை விரும்பி குடிப்பாராம். சில நேரத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும் போது மதிய உணவை தவிர்த்து, வெறும் ஜூஸ் மட்டுமே குடிப்பாராம்.

மேலும் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் வேகவைத்த உணவுகளை மட்டுமே இரவு உணவாக, 8 மணிக்குள் சாப்பிட்டு, அதன் பின்பு பசித்தாலும் வெறும் தண்ணீரை மட்டுமே குடிப்பாராம்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்