நிறைய பேர்கள் காலையில எழும் போது அவர்களின் சருமம் மோசமான தன்மையுடன் காணப்படுகிறது என்று வருத்தப்படுவதுண்டு. அதை போக்க இதோ இப்படி செய்து பாருங்கள்.
- ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
- இரண்டு சந்தனம் ,ஒரு சிறிய பாட்டில் பன்னீர் இரண்டையும் கலக்கி இரவு படுக்கும் முன்பு முகத்தில் தடவவேன்டும் காலையில் எழுந்தவுடன் முதலில் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும் இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் உங்களுக்கு மாற்றம் தெரியும்.
- வெள்ளரிக்காயை நறுக்கி பிறகு மசித்து கொள்ள வேண்டும். பிறகு தூங்குவதற்கு முன்பு உங்கள் சுத்தமான முகத்தில் இந்த பேஸ்ட்டை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். பிறகு காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.
- இரவில் படுப்பதற்கு முன் உங்கள் முகத்தில் சிறிது அளவு பாதாம் எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் மைல்டு க்ளீன்சர் மற்றும் வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவ வேண்டும். நல்ல ஈரப்பதம் உள்ள மென்மையான சருமத்தை பெறலாம்.
- இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.