மன்னர்களை ஈர்க்கும் பழங்காலத்து அரசிகளின் அழகு ரகசியங்கள்

Report Print Trinity in அழகு
0Shares
0Shares
lankasrimarket.com

பழங்காலத்து அரச வாழ்க்கை என்பது அத்தனை பேருடைய ரகசிய கனவுகளில் ஒன்று, அந்த அளவிற்கு அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள் இருந்து வந்தது.

அதிலும் குறிப்பாக மஹாராணி என்பவர் பெண்களின் கனவு நாயகி காரணம், அவரது ஆடம்பரமான வாழ்க்கை, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் சேவையாளர்கள் என பல்வேறு விதமான சுதந்திரங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

ஆட்சி முறையில் அவ்வளவாக அவர்களுக்கு சுதந்திரம் இல்லாத போதும் அவர்கள் சுதந்திர பறவைகளாகவே அவர்களது "எல்லைக்குள்" வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

மஹாராணி போல வாழ்க்கை என்பது எல்லோருக்கும் நனவாகி விடக் கூடிய கனவல்ல. ஆனாலும் மகாராணியின் அழகு ரகசியங்கள் சிலவற்றை தெரிந்து கொள்வதன் மூலம் சில விதங்களில் நாமும் அந்த வாழ்க்கையை திரும்ப கொண்டு வந்து வாழ முடியும்

இப்போதெல்லாம் திருமணம் ஆன சில மாதங்களில் திருமண பந்தம் முடிவடைந்து விடுகிறது. ஆனால் பழங்காலத்து ராணிகள் தங்கள் கணவருக்கு தங்கள் மீதான ஈர்ப்பை நீண்ட காலமாக காப்பாற்றியே வந்திருக்கின்றனர், அதன் ரகசியத்தை அறிந்து கொள்வதன் மூலம் இன்றைய தலைமுறைகள் தங்கள் துணையை தக்க வைத்து கொள்ளும் உபாயங்கள் அறிய முடியும்.

எவ்வளவு பெரிய அரசராக இருந்தாலும் எவ்வளவு பெண்கள் அந்தப்புரத்தில் இருந்தாலும் மகாராணி மீது ஈர்ப்பு இல்லாத வேந்தனே இல்லை.

அதற்கு காரணம் அரசிகளுக்கென சில குளியல் முறைகள், அரண்மனை தாதிகள் தரும் அழகு பராமரிப்புகள், அழகை பராமரிப்பதெற்கென்றே சில தனி வைத்தியர்கள் அவர்கள் தரும் சித்த வைத்திய மருந்துகள், உணவு பராமரிப்புகள் போன்றவற்றை அரசிகள் கடைப்பிடித்து வந்ததுதான்.

குளியல்

அந்த காலத்து அரசிகள் பெரும்பாலும் தங்கள் குளியல் நேரங்களில் இயற்கையான வாசனை திரவியங்கள் பயன்படுத்துவது வழக்கம். அதனோடு அவர்களது குளியல் நேரம் என்பது இயல்பை விட கொஞ்சம் அதிகமானதாகவே இருக்கும்.

அரசிகள் அதிகமாக பயன்படுத்துவது ரோஜாப்பூக்கள் நிறைந்த நீர் குளியல்தான். ரோஜாப்பூக்களின் பயனால் ராணிகள் உடல் பூக்களை போன்றே மென்மையாகவும் பட்டு போன்ற வசீகரத்தோடும் மினுமினுப்பாக இருக்கும்.

இந்த முறையை நாமும் பின்பற்ற முடியும் நமது குளியறை பாத்டப்பிலோ அல்லது பக்கெட் நீரிலோ ரோஜாப்பூ இதழ்கள் நிரப்பி குளியலை இனிமையாக்கி நம்மையும் வசீகரமாக்க முடியும்.

கழுதை பால்

இப்போதுள்ளது போல அப்போது வயதாவதை தடுக்கும் ஆன்டி ஏஜிங் பொருளாக கழுதை பாலை பயன்படுத்தி வந்துள்ளனர். கழுதை பாலோடு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதனோடு இயற்கையான தேன் கலந்து சருமத்தில் தடவி ஊற வைத்து குளிக்கும்போது எல்லோருமே மகாராணி தோற்றத்தை பெறுவார்கள் என்பது உறுதி.

நடனம்

அந்த காலத்தில் இப்போதைய ஏரோபிக்ஸ் பயிற்சிகள் எதுவும் கிடையாது. உடல் வடிவமாக இருக்க அரசிகள் பயன்படுத்தியது நடனக் கலை மட்டுமே. இந்தியர்களின் பாரம்பர்ய நடனங்கள் வெறும் கலை மட்டுமல்ல பெண்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கும் ஒரு பொக்கிஷமாகவே இருந்து வந்துள்ளது.

மன அழுத்தங்களிலிருந்து மீள்வதற்கும் நடனம் சிறந்த ஒரு தீர்வாகும் என்பது கூடுதல் செய்தி. ஆகவே மகிழ்வோடு நடனமாடுங்கள் ஒரு கட்டத்தில் நீங்களே நடனமாக மாறுங்கள். அழகென்பதும் பொலிவென்பதும் உங்களுக்கு மட்டுமே வசப்படும் ஒரு மாயவித்தையாக மாறிவிடும்.

அணிகலன்கள்

மகாராணி என்றதும் நம் நினைவுக்கு வருவது எந்த ராணியின் முகமும் அல்ல. அவர்களின் ஆடம்பரமான உடையணியும் பழக்கம் மற்றும் அணிகலன்கள் அவர்களை அலங்கரிக்கும் பழக்கமும்தான். இதற்கென்றே அரசர்கள் போருக்காக நாடு விட்டு நாடு சென்று வெற்றி பெரும் போதெல்லாம் அந்தந்த நாடுகளின் அணிகலன்களை அள்ளி வந்து தம் மனைவியருக்கு அளிப்பார்களாம்.

அதுமட்டுமில்லாமல் சாதாரண பயணங்களின் முடிவிலும் அந்தந்த நாட்டின் அணிகலன்களை வாங்கி வந்து மனைவியரை சந்தோஷ படுத்துவார்களாம்.

மஹாராணி வாழ்வில் உடைக்கான முக்கியத்துவம் இருந்து வந்திருக்கிறது. நாமும் நாம் செல்லும் இடங்களுக்கு பொருந்தும் வகையில் உடை அணிவது, அணிகலன் அணிவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

உதாரணமாக தியேட்டருக்கு படம் பார்க்க போகும் போது பட்டு புடவை நகைகள் அவசியம் இல்லை. எளிமையாக உடுத்தி இருக்க வேண்டும்.

இப்படி யோசனை செய்து இடத்திற்கு பொருந்தினால் போல உடைகளில் கவனம் செலுத்தினால் தோற்றத்தில் மிடுக்கும் முகத்தில் பொலிவும் நாம் அழைக்காமலேயே நம்மிடம் வந்து விடும்.

வாசனை ஏற்படுத்தும் மாயங்கள்

அந்த காலத்து ராணிகள் தங்கள் கணவன்மார்களை தனிப்பட்ட வாசனையின் மூலம் ஈர்த்து வந்தனர். இதற்கென்றே தனக்கென தனிப்பட்ட வாசனை திரவியங்களை செய்வதற்கு தனிப்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்தி உள்ளனர்.

வாசனைகளுக்கென்று நமது மூளையில் சில நியூரான்கள் செயல்படுகின்றன. இந்த நியூரான்கள் நாம் இறக்கும் வரையில் சில குறிப்பிட்ட வாசனைகளுக்கேற்ற நினைவுகளை சுமந்து செல்லும் தன்மை கொண்டது.

ஆகவே அடிக்கடி நமது வாசனை திரவியங்களை மாற்றாமல் நமக்கென பிரத்யேகமாக சில வாசனை திரவியங்கள் மட்டுமே பயன்படுத்துவது நம் அருகில் இருப்பவர்களின் அன்பை நிரந்தரமாக்க உதவி செய்யும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்