பருக்களை விரட்டி முகத்தை பொலிவாக்கும் தக்காளி பேஷியல்

Report Print Kavitha in அழகு
241Shares
241Shares
lankasrimarket.com

தக்காளி சருமத்தை மிருது வாக்குவாக்கும் சிறந்த பொருளாகும்.

தக்காளியில் கலந்திருக்கும் வைட்டமின் சி முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் தோன்றுவதை கட்டுப்படுத்தும்.

தக்காளி ஜூஸுடன் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிய முறையில் முகத்திற்கு பேஷியல் செய்வது பற்றி பார்ப்போம்.

  • ஒரு தக்காளி பழத்தை மிக்சியில் அரைத்து ஜூஸாக்கிக்கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் மற்றும் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடவும். தக்காளி ஜூசும், வெள்ளரிக்காயும் முகத்தில் படியும் அதிகப்படியாக எண்ணெய் பிசுபிசுப்பை போக்கி, முகத்தை பளபளக்கசெய்யும்.
  • உலர்ந்த சருமம் கொண்டவர்கள் தக்காளியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். ஒரு தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து முகத்தில் பூசிவர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து நன்றாக உலர்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். குளிர்ந்த நீரை பயன்படுத்தக்கூடாது. தொடர்ந்து அவ்வாறு மசாஜ் செய்து வந்தால் சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் மாறத்தொடங்கி விடும்.
  • ஒரு தக்காளி பழத்தை ஜூஸாக்கி அதனுடன் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, சிறிதளவு தயிர் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பளிச்சென்று காட்சியளிக்கும். மாசுவினால் சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தலாம்.
  • தக்காளிப்பழத்தை கூழாக்கிக்கொள்ள வேண்டும். ஓட்ஸை பவுடராக மாற்றிவிட வேண்டும். பின்னர் தலா இரண்டு டேபிள் ஸ்பூன்கள் தக்காளி கூழையும், ஓட்ஸையும் ஒன்றாக பிசைந்து அதனுடன் சிறிதளவு வெள்ளரிக்காய் கூழை சேர்த்து முகத்தில் பூசிவர வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுவது அவசியம்.
  • தக்காளிப்பழத்தை கூழாக்கி அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்க வேண்டும். ஒரு டீஸ்பூன் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். அந்த கலவையை முகத்தில் பூசிவிட்டு அது நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவி வர வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால் சருமம் பிரகாசமாகும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்