இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சுவீடன் வர்த்தகர்கள்

Report Print Ajith Ajith in வர்த்தகம்
0Shares
0Shares
lankasrimarket.com

சுவீடன் தேசிய வர்த்தக சபை மற்றும் இலங்கை வர்த்தக திணைக்களம் ஆகியவற்றின் அழைப்பின்பேரில் சுவீடனைச் சேர்ந்த மூன்று வர்த்தக நிபுணர்கள் இலங்கை வந்துள்ளனர்.

சுவீடனுக்கான ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ள, இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை எதிர்வரும் புதன்கிழமை உலக வர்த்தக மைய கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

கறுவா, தேயிலை, இயற்கை உணவு பொருட்கள் காய்ந்த தென்னை பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், மசாலா வணிக உணவு பொருட்கள தொடர்பிலான, விதிகள் மற்றும் உணவு ஏற்றுமதியின் போது கடைப்பிடிக்கப்படும் கட்டுப்பாடுகள் சுவீடனின் சந்தை தகவல் முதலான விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments