தெற்காசியாவில் முன்னிலை வகிக்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை!

Report Print Vethu Vethu in வர்த்தகம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தெற்காசியாவின் சிறந்த விமான சேவை வழங்கும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பெயரிடப்பட்டுள்ளது.

சீனாவின் பிரபல சுற்றுலா சஞ்சிகையினால் நடத்தப்பட்ட பத்தாவது வருடாந்த சுற்றுலா விருது விழாவில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையில் பயணங்களை விஸ்தரிப்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்தினால் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலத்தின் பின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பெற்றுக் கொண்ட விருது இதுவாகும்.

அதற்கமைய இதற்கு முன்னர் World travel award விழாவில் இந்திய பெருங்கடல் எல்லையில் செயற்படுகின்ற உலகின் முதலாவது விமான சேவையாகவும், முழுமையான சேவையை வழங்கும் மத்திய மற்றும் தெற்காசிய எல்லையின் விமான சேவையாகவும், Future experience Asia award விருது விழாவில் ஸ்ரீலங்கன் விமான சேவை விருது வெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments