சீனாவால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Report Print Murali Murali in வர்த்தகம்
0Shares
0Shares
lankasrimarket.com

சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் சலுகையற்ற ரீதியில் பெற்றுக்கொண்டுள்ள கடன் தொடர்பில் அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் அலிஸ் வேல்ஸ், தெற்காசியா தொடர்பான காங்கிரஸ் உப குழு முன்னலையில் ஆஜராகி இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

"இலங்கையின் உள்ளக அபிவிருத்திகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை சீனா முதலீடு செய்கின்றது. இந்நிலையில் சீனாவிற்கு கடனை மீளச்செலுத்துவதற்கு இலங்கை திண்டாடுகின்றது.

இந்நிலையில், சீன அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிறுவனம் ஒன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

இதன்படி, 1.1 பில்லியன் டொலர் உடன்படிக்கையில் சீன நிறுவனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவுள்ளது. அத்துடன், சீனா இலங்கைக்கு சலுகையற்ற கடன்களை வழங்கி வருகின்றது.

அது நீடித்த் கடன் சுமையை அதிகரிக்கின்றது. இந்த விடயம் இலங்கை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் கவலையளிப்பதாக" அலிஸ் வேல்ஸ் காங்கிரஸ் உப குழு முன்னிலையில் கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கைக்கான கடன் உதவியை அமெரிக்கா 92 வீதத்தினால் குறைத்துள்ளது. இலங்கையில் நாங்கள் அதிகளவில் மானிய உதவிகளை வழங்கி வருகின்றோம்.

இதேவேளை, பலதரப்பட்ட விடயங்களின் ஊடாக நாம் எமது உறவை ஏற்படுத்தி வருகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்