நீங்கள் வாங்கும் பொருட்கள் அசலா? போலியா?...கண்டுபிடிக்க வழி இதோ!

Report Print Raju Raju in வர்த்தகம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் போலிகள் வந்துவிட்டது. அசலை போலவே போலி உள்ளதால் அதை கண்டுப்பிடிப்பது சிறிது கடினம்.

ஆனால், சில முக்கிய விடயங்களை உற்றுநோக்கினால் போலியான பொருட்களை கண்டுபிடிக்க முடியும்.

advertisement

ஒரு பொருளானது நம்பமுடியாத அளவில் அதீத தள்ளுபடி விலைக்கு விற்கப்பட்டால் அது போலியாகும்.

அசலான பிராண்டட் வகை பொருட்கள் பழுதின்றி மிகுந்த கவனத்துடன் பேக் செய்யப்படும்.

அதுவே, பொருட்கள் ஏனோதானோவென்று பேக்கேஜ் செய்யப்பட்டிருந்தாலோ, பெட்டியில் சரியாகப் பொருந்தாமல் இருந்தாலோ அது போலி தான்.

எழுத்துப்பிழை மூலமும் போலிகளை எளிதில் கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, Hewlett Packard, Hewlet என்றும், Louis Vuitton, Vitton என்றும் போலியாக எழுதப்படுவதைக் கூறலாம்.

ஓன்லைன் மூலம் பொருட்கள் வாங்கினால் குறித்த வலைத்தளம் உண்மையானதா என பார்க்க வேண்டும்.

வலைத்தளமே போலியாக இருப்பின், பொருட்களும் நிச்சயம் போலியாகத் தான் இருக்கும். வலைத்தளத்தின் URL-ஐ உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

எழுத்துப்பிழைகளைப் போலவே, போலியான லோகோக்கள், பிராண்ட் பெயர்கள் மற்றும் வர்த்தக அடையாளங்களைக் கண்டறிவதும் எளிதான விடயம் தான்.

அசல் லோகோக்கள், பிராண்ட் பெயர்களை சரியாக தெரிந்து வைத்திருந்தால் இதை கண்டுபிடித்து விடலாம்.

அதே போல, நாம் வாங்கும் பொருட்களின் உற்பத்தியாளரின் முகவரி, மின்னஞ்சல், தொலைப்பேசி எண் அல்லது தொடர்பு கொள்வதற்கான தகவல்கள் போன்றவை பொருளின் மீதோ அதன் பேக்கேஜின் மீதோ குறிப்பிடப்படாதிருப்பின், அது சந்தேகத்திற்குரியதே.

advertisement

முக்கியமாக, பொருளை வாங்கும் முன்பே கடையிலேயே பெட்டியைத் திறந்து சரிபார்த்துக் கொள்வது சிறந்தது. ஓன்லைனில் வாங்கினால் டெலிவரியின் போது பெட்டியைத் திறப்பதை வீடியோ பதிவாக ரெகார்ட் கூட செய்து கொள்ளலாம்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்