இலங்கை மருந்து தயாரிப்பு வலயத்தில் மலேசிய நிறுவனமொன்று 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளது.
வெலிப்பன்ன பிரதேசத்தில் அமைந்துள்ள மருந்து உற்பத்தி தயாரிப்பு வலயத்திலேயே மலேசிய நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.
இதற்காக இலங்கை முதலீட்டுச்சை 50 ஏக்கர் நிலப்பகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியில் மட்டுமின்றி இலங்கை மக்கள் பலரும் நன்மை அடையக்கூடிய வகையில் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.