அதிரடி வீழ்ச்சி கண்டது பிட்காயின் பெறுமதி: தற்போதைய பெறுமதி எவ்வளவு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in வர்த்தகம்
0Shares
0Shares
lankasrimarket.com

அண்மைக்காலமாக டிஜிட்டல் நாணயங்களுள் ஒன்றான பிட்காயின் பற்றி பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தன.

குறுகிய காலத்தில் இதன் மீது முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது.

இதன் காரணமாக பிட்காயின் ஒன்றின் பெறுமதியும் அதிகரித்திருந்தது.

அதாவது இதன் பெறுமதியானது அண்மையில் 9,052 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

எனினும் இவை அங்கீகரிக்கப்படாத நாணயங்கள் என்பதால் பிட்காயினுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் பாய்ந்தன.

சில நாடுகள் இவற்றினை தடை செய்ததுடன், பேஸ்புக் போன்று இணையத்தளங்களும் பிட்காயின் விளம்பரங்களை தடை செய்தன.

இதனால் பிட்காயினின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி 7,695 அமெரிக்க டொலர்கள் ஆக குறைவடைந்துள்ளது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்