இந்தியாவுடனான வர்த்தகம் நிறுத்தப்படும்: டிரம்ப் எச்சரிக்கை

Report Print Kabilan in வர்த்தகம்
0Shares
0Shares
lankasrimarket.com

உயர்ந்த வரி விதிப்பால் இந்தியா மற்றும் பல நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்த போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கியூபெக்கில் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

உலகின் பல்வேறு நாடுகள், இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் வரி விதிக்கின்றன என தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சில அமெரிக்க பொருட்களுக்கு வரியானது 100 சதவிதம் வசூலிக்கப்படுகிறது.

அமெரிக்க மோட்டார் நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் இருசக்கர வாகனங்களின் மீதான வரி விதிப்பை, இந்தியா இன்னும் உயர்த்தப் போவதாக மிரட்டுகின்றது.

இதே நிலை தொடர்ந்தால், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனங்களின் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவோம்.

இதுதொடர்பாக பல நாடுகளிடம் பேசி வருகிறோம். எங்களுக்கு சாதமான தீர்வு கிடைக்கவில்லையெனில், அந்த நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்துவோம். அதனை செய்தால் அது மிகவும் லாபகரமானதாக அமையும்.

மக்களால் தொடர்ச்சியாக அதனை செய்ய முடியாமல் போனால், வரிவிதிப்புகள் வெகுவாக குறையும். அனைத்து நாடுகளும் உண்டியல் போல் உள்ள அமெரிக்காவிடம் கொள்ளையடிக்கின்றன’ என தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா மற்ற நாடுகளுடன் நியாயமான வர்த்தக உறவை வைத்திருப்பது அவசியம் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்