மகனை சித்ரவதை செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் பெற்ற மகனை கொடூரமாக சித்ரவதை செய்து வந்த தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கனடாவில் உள்ள ஒட்டாவா நகருக்கு அருகில் 45 வயதான நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியாக தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில், மகன் என்றும் பாராமல் பல்வேறு காரணங்களுக்காக ஓர் அடிமைப் போல் மகனை நடத்தி வந்துள்ளார்.

உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் ஒரு அறையில் அடைத்து பூட்டி வைத்து சித்ரவதை செய்து வந்துள்ளார்.

சில நேரங்களில் சிகரெட் பிடித்த பிறகு மகனின் உடலில் தீயை அணைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

இச்சித்ரவதையான நீண்ட மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. தந்தையிடம் இருந்து தப்பிக்க மகன் சரியான நேரத்திற்காக காத்திருந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இதுபோன்ற ஒரு நேரம் அமைந்ததும் அங்கிருந்து தப்பி வெளியேறி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரை தொடர்ந்து தந்தையிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் குற்றங்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

தந்தையின் பொலிஸ் உத்தியோகமும் பறிக்கப்பட்டது.

இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது ‘தன்னுடைய சித்ரவதைகளுக்காக மகனிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக’ தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

எனினும், பெற்ற மகனை கொடூரமாக சித்ரவதை செய்த தந்தைக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments