கனடாவில் புலம்பெயர்ந்த மக்களுக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா
0Shares
0Shares
lankasri.com
advertisement

சிரியாவிலிருலிருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்துள்ள சிரியா மக்கள் தங்கள் பெயர்களால் ஏற்பட்ட குழப்பத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

கனடாவுக்கு புலம் பெயரும் சிரிய மக்களுக்கு ஏற்கனவே புதிய மொழியை கற்பது, தங்க இடம் பிடிப்பது, வேலை வாய்ப்பை தேடி கொள்வது போன்ற பிரச்சனை உள்ளது.

advertisement

தற்போது இதனுடன் சேர்த்து அவர்களின் பெயர்களே அவர்களுக்கு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

சமீபத்தில் துருக்கி நாட்டின் வழியாக கனடா வந்த 3000க்கும் மேற்ப்பட்ட சிரிய மக்களை துருக்கி மொழி பேசும் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

பொதுவாக சிரியா மக்களின் பெயர் அரேபிய மொழியில் தான் இருக்கும்.

இந்த பெயர்களை துருக்கியில் மொழி மாற்றம் செய்த அதிகாரிகள் அதை கனடிய அடையாள ஆவணங்கள் பெயருடன் ஒப்பிட்டுள்ளனர்.

இதில் வேறுபாடு இருந்துள்ளது. சொந்த நாட்டிலிருந்து பலர் சரியான ஆவணங்கள் வேறு எடுத்து வராததால் அவர்களின் சரியான பெயரை மொழி பெயர்க்க முடியவில்லை.

இதனால் பலர் கனடாவில் புலம்பெய பெற வேண்டிய அனுமதியை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதற்கு விரைவில் கனடா அரசு தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments