கர்ப்பிணி பெண் கொலை வழக்கு: தகவல் தெரிவித்தால் 50,000 டொலர் வெகுமதி

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து தப்பிய நபர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு பொலிசார் 50,000 டொலர் வெகுமதி அறிவித்துள்ளனர்.

ரொறொன்ரோ ஜேம்சன்ரவுனில் கடந்த ஆண்டு மே மாதம், கன்டிஸ் றோசெலி பொப் எனப்படும் 33-வயது பெண் கூடைப்பந்தாட்டம் பார்த்துவிட்டு வேறு மூவருடன் வாகனமொன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

இச்சமயத்தில் இவருடன் பயணித்தவர்களில் ஒருவரை ஜோன் காலன்ட் புளுவாட் மற்றும் ஜேம்ஸ்ரவுன் பகுதியில் இறக்க சென்ற போது மர்ம நபர் ஒருவர் இவர்களது காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அச்சமயத்தில் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்து பொப் காரின் பின் இருக்கையில் இருந்தார். சபவத்தின்போது காரில் இருந்தது இவர் மட்டும் என கூறப்படுகிறது.

இதனிடையே துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டுமின்றி அவருக்கு அவசர’ சி’ பிரிவு மூலம் குழந்தை பிரசவிக்கப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் அடுத்த ஒரு மாதத்தில் இறந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த போதும், பொலிசாரால் அந்த நபரை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கு 50,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என விசாரணை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments