11 மாத குழந்தையுடன் பெண் மாயம்: ரொறொன்ரோ பொலிஸ் வலை

Report Print Arbin Arbin in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடாவின் ரொறொன்ரோ பகுதியில் இருந்து 11 மாத குழந்தையுடன் மாயமான இளம் தாயாரை பொலிசார் தேடி வருகின்றனர்.

ரொறொன்ரோவின் டவுன்ஸ்வியூ அருகே வியாழக்கிழமை பிற்பகல் குறிப்பிட்ட தாயாரும் குழந்தையும் காணப்பட்டனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

23-வயதுடைய கைலா சென்.லூயிஸ் அவரது மகன் செவொன் சென்.லூயிஸ் ஆகிய இருவரும் வியாழக்கிழமை பிற்பகல் 2-மணியளவில் செப்பேர்ட் அவெனியு மற்றும் அலன் வீதி பகுதியில் காணப்பட்டனரென கூறப்பட்டுள்ளது.

வீட்டு பிரச்சனைகள் காரணமாக இவர்களை தேடவில்லை எனவும் குழந்தையின் நலன்கருதியே தேடுவதாகவும் 32-வது டிவிசன் ஊழியர்கள் சார்ஜன்ட் சிபி 24-விற்கு தெரிவித்துள்ளார்.

சென். லூயிஸ் 5.2 உயரம் நீல/கிரே கண்கள் மற்றும் சிவப்பு நிற முடி கொண்டவர். கடைசியாக காணப்பட்ட போது இருண்ட நிற காற்சட்டை மற்றும் ஜீன் ஜக்கெட் அணிந்திருந்தார் என தெரிய வந்துள்ளது.

ஷெவொன் நீலம் மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட ஒட்டு மொத்த ஆடை அணிந்திருந்தான். தகவல் தெரிந்தவர்கள் 416-808-3200 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்கப்படுகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments