கனடிய பிரதமரின் உணர்ச்சிபூர்வமான ரமலான் வாழ்த்து செய்தி

Report Print Raju Raju in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா மற்றும் உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கனடிய பிரதமர் ட்ரூடோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கனடா மற்றும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்கள் ரமலானை தொடங்கி உள்ளீர்கள்.

ரமலான் என்பது இஸ்லாமிய சமூக மக்களுக்கு வருடத்தின் புனிதமான காலமாகும். இந்த காலம் நபிகள் நாயகம் குரானை வெளிப்படுத்தியதை நினைவூட்டுகிறது.

நோன்பு, பிரார்த்தனை என இந்த பயணம் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

ரமலான் சமயத்தில் இஸ்லாமிய மக்கள், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்து, மாலை நேரத்தில் ஒன்றாக உணவு அருந்துவார்கள்.

நமக்கு தரப்பட்டுள்ள பரிசுகளுக்காக நாம் மற்றவர்களை பாராட்ட வேண்டும் என ரமலான் நமக்கு நினைவூட்டுகிறது, அதற்காக நாம் பரிசுகளை திரும்ப தாராளமாக அடுத்தவர்களுக்கு தர வேண்டும் என ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் 150வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடும் இந்த நேரத்தில், பலவிதமான கலாச்சாரங்கள், பண்பாடு, நம்பிக்கை கொண்டு வாழ சிறந்த இடமாக இருக்கும் கனடாவை கெளரவிக்கும் விதமாக இதை நாம் பார்க்க வேண்டும்.

கனடாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்த நாட்டை வலுவான, பன்முகமான நாடாக இப்போது இருப்பதை போலவே இருக்க வைக்க உதவ வேண்டும் என கூறியுள்ளார்.

தன் குடும்பம் மற்றும் மனைவியின் சார்பாக கனடா மற்றும் உலகில் வாழும் அனைத்து இஸ்லாமிய சமூக மக்களுக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக ட்ரூடோ தெரிவித்துள்ளார் .

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments