தந்தையை காப்பாற்ற துடிக்கும் பிள்ளைகள்: மெளனத்தை கலைப்பாரா கனடா பிரதமர்?

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதி அரேபியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது தந்தையை காப்பாற்ற உதவுமாறு அவருடைய 3 பிள்ளைகள் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுதி அரேபியா மதக்குருக்களை விமர்சனம் செய்த குற்றத்திற்காக Raif Badawi என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு யூன் 17-ம் திகதி கைது செய்யப்பட்டார்.

இவரது குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 கசையடிகளையும் தண்டனையாக நீதிமன்றம் அளித்துள்ளது.

இவர் கனடா குடிமகன் இல்லையென்றாலும், இவரது மனைவியும் 3 பிள்ளைகளும் தற்போது கியூபெக் மாகாணத்தில் உள்ள Sherbrooke நகரில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களது தந்தையை விடுதலை செய்ய உதவுமாறு 3 பிள்ளைகளும் கனடா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டியின் இணையத்தளத்தில் இவர்களது வீடியோ வெளிடப்பட்டுள்ளது.

இதில், ‘தந்தையை பார்த்து 5 ஆண்டுகள் ஆகிறது. இனிமேலும் மெளனம் காக்க வேண்டாம். தயவு செய்து சவுதி அரேபியா மன்னரை தொடர்புக்கொண்டு எங்களது தந்தையை விடுதலை செய்ய உதவ வேண்டும்’ என மூவரும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விவகாரத்தில் கனடா பிரதமர் அமைதியாக இருப்பதற்கு அம்னாஸ்ட்டியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

எனினும், இதுவரை கனடா பிரதமர் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கவில்லை.

எதிர்வரும் யூன் 17-ம் திகதி பதாவி கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதால் மாண்டீரியல் நகரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அம்னாஸ்ட்டி ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments