கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த நடவடிக்கை

Report Print Ramya in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் அடுத்து வரும் வாரங்களில் நாடு கடத்தப்படவுள்ளார் என கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கம் என்பவரே நாடு கடத்தப்படவுள்ளதாக கனேடிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையரை நாடு கடத்துவதற்கான பயண ஆவணங்கள் தயார் படுத்தப்பட்டு வருவதாக திணைக்களத்தின் வழக்கறிஞர் Ewa Staszewicz தெரிவித்துள்ளார்.

கொலை குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது. இதன்போது இலங்கைக்கு செல்வற்கு சிவலோகநாதன் தனபாலசிங்கம் இணங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உயிராபத்து இருப்பதாக தான் நம்பவில்லை எனவும், அகதியாக பாதுகாக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மனைவி அனுஜா பாஸ்கரனை கொலை செய்த சம்பவம் தொடர்பில், தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments