விபத்தில் உயிரிழந்த மனைவி: கல்லறைக்கு சென்றபோது கணவனும் விபத்தில் பலி

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் கல்லறைக்கு சென்ற கணவரும் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள கல்கேரி நகரில் Ahmed Nourani Shalloo மற்றும் Maryam Rashidi Ashtiani என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

மனைவி ஒரு பெட்ரோல் நிலையத்திலும், கணவன் தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணி புரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெட்ரோல் நிரப்ப வந்த நபர் ஒருவர் நிலையத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்ப முயன்றுள்ளார்.

இதனை பார்த்த மர்யம் அவனை பிடிக்க சாலையில் இறங்கி ஓடியுள்ளார். அப்போது, வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இவ்விபத்தில் மர்யம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மனைவி உயிரிழந்ததும் அஹ்மத் தனது பிள்ளைகளுடன் வான்கூவர் நகரில் குடியேறியுள்ளார்.

இந்நிலையில், மனைவியின் கல்லறையை பார்ப்பதற்காக நேற்று கல்கேரி நகருக்கு காரில் புறப்பட்டுள்ளார்.

அப்போது, துரதிஷ்டவசமாக சாலையில் நிகழ்ந்த விபத்தில் அஹ்மத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் பேசியபோது ‘படங்கள் மற்றும் கதைகளில் தான் இதுபோன்ற சோகமான சம்பவங்கள் நிகழும். ஆனா, உண்மையிலேயே இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் மனைவியும் கணவனும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக’ தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments