நச்சு இரசாயன பொருளை ஏற்றி வந்த டிரக் நெடுஞ்சாலையில் கவிழ்ந்துள்ளது

Report Print Fathima Fathima in கனடா
0Shares
0Shares
lankasri.com

எரியக்கூடிய அபாயகரமான இரசாயன பொருளை ஏற்றி வந்த ஒற்றை போக்குவரத்து டிரக் வண்டி ஒன்று குயின் எலிசபெத் வேயில் கவிழ்ந்ததால் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டதுடன் கட்டாயமான ஒரு வெளியேற்றமும் ஏற்படுத்தப்பட்டது.

சென்.கத்தரினில் செவ்வாய்கிழமை பிற்பகல் இந்த விபத்து நடந்தது.

விபத்து காரணமாக தீ ஏற்பட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சார்ஜன்ட் கெரி ஸ்மித் தெரிவித்துள்ளார்.

வாகனம் பொஸ்பைன் எனப்படும் ஒரு நச்சு பொருளை வண்டியில் கொண்டு வந்துள்ளது. எரியக்கூடிய ஒரு வகை நச்சுவாயு என கூறப்பட்டுள்ளது.

அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புக்கள் மற்றும் வியாபாரங்கள் வெளியேற்றப்படுகின்றன.

விபத்தில் எவரும் காயமடையவில்லை. இப்பகுதியில் கனத்த தாமதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments