பொலிஸ் வேடத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் கொள்ளையிட்ட மர்ம நபர்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் பொலிஸ் வேடத்தில் பாலியல் தொழிலாளிகளிடம் கொள்ளையிட்ட மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் கல்கேரி நகரில் உள்ள ஹொட்டல் ஒன்றில் பாலியல் தொழிலாளி ஒருவரை மர்ம நபர் ஒருவர் வரவழைத்துள்ளார்.

பெண் அறைக்குள் நுழைந்ததும் தான் ஒரு பொலிஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்டு பெண்ணிடம் அவர் சோதனை செய்துள்ளார்.

அப்போது, ‘பொலிஸ் என்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்’ என பெண் கூறியதும் சுதாரித்துக்கொண்ட அந்நபர் பெண்ணை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இவ்விகாரம் தொடர்பாக அப்பெண் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இதே போன்ற சம்பவங்கள் வேறு சில இடங்களிலும் நடந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதாவது, பாலியல் தொழிலாளிகளை குறித்து மர்ம நபர் ஒருவர் தன்னை பொலிசார் எனக் கூறிக்கொண்டு கொள்ளையிட்டு வருகிறார்.

கல்கேரியில் மட்டும் சில பாலியல் தொழிலாளிகள் 10,000 டொலர் வரை இழந்துள்ளனர்.

எட்மோண்டன் நகரில் பாலியல் தொழிலாளி ஒருவரை கட்டுப்போட்டு அவரிடம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்கள் அனைத்தையும் ஒரே நபர் தான் செய்து வருவதாக பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

ஹொட்டலில் கிடைத்த ஆதாரங்களை வைத்து பார்க்கும்போது மர்ம நபர் மத்திய கிழக்கு ஆசிய நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும், சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் பொலிசாரை உடனடியாக தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments