மரம் மீது பயங்கரமாக மோதிய கார்: பரிதாபமாக பலியான இளம்பெண்கள்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் மரம் மீது மோதி கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளம்பெண்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடா தலைநகரான ஒட்டாவாக்கு அருகில் உள்ள Stittsville என்ற நகரில் தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நேற்று இரவு சுமார் 9 மணியளவில் Fernbank சாலையில் கார் ஒன்று பயணமாகியுள்ளது. இந்த காரில் 17 வயதான 3 இளம்பெண்கள் மற்றும் 18 வயதான ஒரு வாலிபர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சாலையில் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரம் மீது மோதியதாக கூறப்படுகிறது.

கார் மரம் மீது மோதிய வேகத்தில் பல மீற்றர் தூரத்திற்கு சாலையில் உருண்டு அருகில் உள்ள வனத்தில் விழுந்துள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் காரில் இருந்தவர்களை மீட்க போராடியுள்ளனர்.

துரதிஷ்டவசமாக, 17 வயதான இரண்டு இளம்பெண்களும் சம்பவம் இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்தபோது மற்றொரு பெண் மட்டுமே சுயநினைவுடன் இருந்துள்ளார். காயமடைந்து மயக்கத்தில் இருந்த வாலிபரை பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எனினும், இருவரும் தற்போது அபாயக்கட்டத்தில் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்தை தொடர்ந்து சாலையின் இருபுற போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும், இரண்டு இளம்பெண்கள் பலியான விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments