குடிமக்களிடம் மன்னிப்பு கோரிய கனடா பிரதமர்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

கனடா நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்பாராத விதமாக செய்த வார்த்தை பிழைக்காக குடிமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

கனடாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ’150-வது கனடா தினம்’ நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

advertisement

தலைநகரான ஒட்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்றுள்ளார்.

அப்போது, ‘கனடாவின் முன்னேற்றத்திற்கு மதம் மற்றும் இனம் சார்பின்மை தான் காரணம்.

எந்த மாகாணமாக இருந்தாலும் அனைவரும் கனடாவின் குடிமக்கள்’ எனக் கூறிய பிரதமர் கனடாவில் உள்ள ஒவ்வொரு மாகாணத்தின் பெயர்களை தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள 13 மாகாணங்களில் 12 மாகாணங்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். அல்பேர்ட்டா மாகாணத்தின் பெயரை குறிப்பிடாமல் உரையை முடித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அனைத்து மாகாணங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்றதால் பிரதமரின் இந்நடவடிக்கை அல்பேர்ட்டா மாகாண மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

எனினும், சுதாரித்துக்கொண்ட பிரதமர் ஜஸ்டின் மீண்டும் மேடை ஏறி ‘மன்னிக்கவும், அல்பேர்ட்டா மக்களை நான் மிகவும் நேசிக்கிறேன். கனடா தின வாழ்த்துகள்’ எனக் கூறிவிட்டு விடைபெற்றுள்ளார்.

பிரதமரின் இந்நடவடிக்கையை கண்டித்து சமூக வலைத்தளங்களில் தற்போது வரை காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

கனடா தின நிகழ்ச்சியை முடித்துக்கொண்ட ஜஸ்டின் தற்போது ஐரோப்பாவில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

எதிர்வரும் யூலை 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் ஜேர்மன் தலைநகரான பெர்லினில் நடைபெற உள்ள G-20 மாநாட்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments