கனடாவில் தமிழ் பெண் கொலை! குற்றவாளிக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

Report Print Vethu Vethu in கனடா
0Shares
0Shares
lankasri.com
advertisement

கனடாவில் விபத்தை ஏற்படுத்தி தமிழ் பெண் ஒருவரை கொலை செய்த நபருக்கு மூன்று வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு இடம்பெற்ற விபத்தில் தமிழ் பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 12 பேர் காயமடைந்தனர்.

advertisement

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய 43 வயதுடைய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம் Vicente Arbis என்ற நபருக்கு எதிரான ஆறு குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியாக இணங்காணப்பட்டுள்ளார்.

2013ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13ம் திகதி அன்று டொரொன்டோவின் வடமுனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணியளவில் ட்ரக் வண்டி ஒன்றை ஓட்டிச் சென்ற Arbis என்பவர், அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது மோதியமையினால் விபத்து நிகழ்ந்துள்ளது.

இதன்போது ரஞ்சனா கனகசபாபதி என்ற 52 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர்.

ரஞ்சனா கனகசபாபதி என்ற பெண் கோவிலுக்கு சென்ற போது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது அவரது குடும்ப உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபர் தொலைபேசியை பேசியவாறு தவறான வழியில் வாகனத்தை ஓட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 10 ஆண்டுகளுக்கு சாரதியாக செயற்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments