மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பின்னர் இவர் தான்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடா நாட்டின் அடுத்த கவர்னர் ஜெனரலாக முன்னாள் விண்வெளி வீராங்கனை ஒருவரை அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தெரிவு செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

கனடா நாட்டு வரலாற்றில் முதன் முதலாக விண்வெளி பயணம் மேற்கொண்டவர் Julie Payette(54) என்ற பெண்மணி தான்.

மாண்ட்ரீயல் நகரை சேர்ந்த ஜூலி கடந்த 1999-ம் ஆண்டு விண்வெளி பயணத்தை மேற்கொண்டு கனடாவிற்கு புகழை பெற்றுக்கொடுத்தார்.

ஜூலியின் பணிக்காலம் முடிவுப் பெற்றதை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுப்பெற்றார்.

இந்நிலையில், தற்போது கனடா நாட்டின் கவர்னர் ஜென்ரலாக பதவி வகித்து வரும் டேவிட் ஜான்சனின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவு பெறுகிறது.

இதனை தொடர்ந்து புதிய கவர்னர் ஜென்ரலை தெரிவு செய்யும் சூழல் ஏற்பட்ட நிலையில் கனடாவிற்கு புகழை பெற்று தந்த ஜூலியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவு செய்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த அறிவிப்பு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜூலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கனடா நாட்டிற்கு தற்போது பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் தான் அரசாங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

மகாராணி இல்லாத நேரத்தில் கனடா நாட்டு அரசாங்க தலைவராக கவர்னர் ஜென்ரல் தான் பதவியில் நீடிப்பார்.

மேலும், பாராளுமன்ற விவகாரங்களில் முடிவுகள் மேற்கொள்ளவும், அவசியம் என்றால் பாராளுமன்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் கவர்னர் ஜென்ரலுக்கு அதிகாரம் உள்ளது.

கனடா நாட்டு ஆயுதப்படைக்கு கவர்னர் ஜென்ரல் கமாண்டராக இருப்பது மட்டுமில்லாமல், கனடா நாட்டின் பிரதமருக்கு கவர்னர் ஜென்ரல் தான் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments