பிறந்த குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்டிய பெற்றோர்: காரணம் இது தான்

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

கனடா நாட்டில் புகலிடம் பெற்ற பெற்றோர் இருவர் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு அந்நாட்டு பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவின் பெயரை சூட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களுக்கு புகலிடம் அளிப்பேன் என தேர்தலுக்கு முன்னதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வாக்களித்துள்ளார்.

இந்த வாக்கினை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சிரியாவை சேர்ந்த 33,000 அகதிகளுக்கு கனடாவில் புகலிடம் அளித்துள்ளார்.

இவர்களில் Afraa மற்றும் Moe Bilal என்ற தம்பதியும் ஆவார். 2016-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கல்கேரியில் குடியேறியதற்கு பின்னர் மனைவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இவர்களுக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

யுத்தத்தில் உயிர் பிழைத்து வந்த தங்களுக்கு அடைக்கலம் கொடுத்த பிரதமருக்கு நன்றி செலுத்தும் வகையில் தங்களுடைய குழந்தைக்கு Justin-Trudeau Adam Bilal எனப் பெயர் சூட்டினார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று கல்கேரி நகருக்கு சென்றுள்ளார்.

அப்போது, தன்னுடைய பெயரை சூட்டியுள்ள குழந்தையை சந்திக்க வேண்டும் எனப் பிரதமர் கூறியதை தொடர்ந்து பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களுடைய குழந்தையை தன்னுடைய கைகளில் ஏந்தி கொஞ்சியுள்ளார்.

குழந்தையின் நலம் மற்றும் பெற்றோரின் வசதிகள் குறித்து விசாரணை செய்து விட்டு பிரதமர் நிகழ்ச்சிக்கு திரும்பியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments