கனடாவில் புகலிடம் கோரியவர்களின் எண்ணிக்கை 5 மடங்காக அதிகரிப்பு

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடா நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருக்கியில் கடந்தாண்டு யூலை மாதம் ஜனாதிபதி எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கைப்பற்ற மாபெறும் புரட்சி வெடித்தது.

ஆனால், துணிச்சலாக புரட்சியை எதிர்க்கொண்ட எர்டோகன் ஆதரவாளர்கள் சூழ்ச்சியாளர்களை கொன்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டனர்.

இச்சம்பவத்திற்கு பின்னர், ஆட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டிய சதிகாரர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என எர்டோகன் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை தொடர்ந்து சுமார் 10,000 நபர்கள் கைது செய்யப்பட்டனர். 100-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் மூடப்பட்டன.

துருக்கியில் அசாதாரண சூழல் நிலவுவதாலும், கைது நடவடிக்கைக்கு அச்சப்பட்டும் பலர் கனடா நாட்டில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர்.

கனடா குடியமர்வு துறை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள துருக்கி நாட்டை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் 5 மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் கனடாவில் புகலிடம் கோரி துருக்கி நாட்டை சேர்ந்த 1,300 பேருக்கும் அதிகமாக விண்ணப்பம் செய்ததாகவும், இவர்களில் 398 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments